197 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 9 அரசியல் கட்சிகளும் 9 சுயேட்சை குழுக்களிடம் இருந்து கட்டுப்பணம்
Related Articles
உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் நேற்றைய தினம் வரை 9 அரசியல் கட்சிகளும், 9 சுயேட்சை குழுக்களும் கட்டுபணம் செலுத்தியிருந்தன. 197 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனசெத பெரமுன, அருனலு ஜனத்தா பெரமுன, ஐக்கிய காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்;தியுள்ளனர்.
கொட்டகலை பிரதேச சபைக்கு ஒரு சுயேட்சை குழுவும், நீர்கொழும்பு மாநகர சபைக்கு இரு சுயேட்சை குழுக்களும் அக்குரனை மற்றும் பூஜாப்பிட்டிய பிரதேச சபைகளுக்கு தலா ஒரு சுயேட்டை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. குருநாகல் மாநகர சபை, ஹொரணை நகர சபை, பாலிந்த நுவர பிரதே சபை போன்றவற்றிற்கும் சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. மஹரகம நகர சபைக்கு சுயேட்சை குழு ஒன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.