மத்திய வங்கி ஆளுநர் இந்தியாவிடமும் சீனாவிடமும் கோரிக்கை..
Related Articles
கடனை இரத்து செய்வதற்கு துரிதமாக இணக்கம் தெரிவிக்குமாறு சீனாவிடமும் இந்தியாவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிகளை பெற்று கொள்வதற்கு இது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார். சீனாவும் இந்தியாவும் துரிதமாக இச்செயற்பாட்டுக்கு வருவதில் சகல தரப்பினரதும் தேவையாகவுள்ளது. இதன் ஊடாக கடன் வழங்குநர், கடன் பெற்று கொண்டோர் இருதரப்புக்கும் பயன்கிட்டும் என மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்டகாலம் இதேநிலையில் முன்னெடுத்துச் செல்வது பொறுப்புக்களை நிறைவேற்றாமல் இருப்பது இலங்கைக்கு சாதகம் இல்லையென்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை சரிவடைவதற்கு இடமுண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனா இலங்கைக்கு ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கியுள்ளதுடன், இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 9.2 சதவீதத்தினால் சரிவடைந்ததுடன், அது இவ்வாண்டு மேலும் 4.2 சதவீதத்தினால் சரிவடையலாம் என்றும் உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.