இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைக்கு பறவை காய்ச்சல்..
Related Articles
இந்திய மற்றும் பாகிஸ்தானில் கட்நத காலங்களில் பரவிய பறவை காய்ச்சல் நோய் காரணமாக அந்நாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய எந்த வகையிலும் பரிந்துரைகளை வழங்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. பறவை காய்ச்சல் இல்லாத அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, மலேஷியா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளில் இருந்து முட்டை இறக்குமதிக்கு எவ்வித தடையும் இல்லையென குறித்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்ட உற்பத்திகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது உலக கால்நடை அமைப்பு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கு அமைய குறித்த நாடுகளில் பறவை காய்ச்சல் நோய் குறித்தான அவதானத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நோயில் இருந்து விடுப்பட்ட நாடுகளில் இருந்தே அவற்றை இறக்குமதி செய்ய வேண்டும். முட்டை இறக்குமதிக்கும் இது செல்லுப்படியாகும்.
இதற்கமைய ஆறு மாதங்களுள் பறவை காய்ச்சல் நோய் பதிவாகாத எந்தவொரு நாட்டில் இருந்தும் முட்டையை இறக்குமதி செய்ய முடியும். இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்திலும் பறவை காய்ச்சல் நோய் பதிவானது. இதனால் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய பரிந்துரைகளை வழங்க முடியாது. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, மலேஷியா, அமெரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்யலாம். பாகிஸ்தானிலும் பறவை காய்ச்சல் நோய் பதிவாகியுள்ளது.