இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் வர்த்தகர்கள் கவனம்..
Related Articles
இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் வர்த்தகர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். ஜப்பானின் அமைச்சரவையின் இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமாரு உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது. சுற்றுலா, சுரங்கம் மற்றும் தொழிற் பயிற்சி போன்ற பல துறைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய மற்றும் வளர்ந்து வரும் கைத்தொழில்களுக்கு நாட்டை வடிவமைக்கும் வகையில் புதிய பொருளாதார திட்டத்தின் கீழ் நாட்டின் இளைஞர்களுக்கு பயிற்சியளிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதி ஊழியர் பிரிவு தலைவர் சாகல ரத்நாயக்க மற்றும் சர்வதேச உறவுகளுக்கான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.