பிரேசிலில் இடம்பெற்ற கலவரங்களுக்கு தலைமைத்துவம் வழங்கிய அதிகாரிகளை கைதுசெய்யுமாறு உத்தரவு..
Related Articles
பிரேசிலில் இடம்பெற் கலவரங்களுக்கு தலைமைத்துவம் வழங்கிய முன்னணி அதிகாரிகளை கைதுசெய்யுமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிரேசிலின் பல்வேறு இடங்களிலும் அமைதியின்மை ஏற்பட்டது. அவற்றுக்கு தலைமைத்துவம் வழங்கிய அந்நாட்டின் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதானி எண்டர்சன் டொரஸ் உள்ளிட்ட தரப்பினரே கைதுசெய்யப்படவுள்ளனர்.
ஏற்கனவே அந்நாட்டு இராணுவம், பொலிஸ் துறைக்கு பொறுப்பான கட்டளையிடும் அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரேசிலில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஜெயார் பொல்சனாரோ வெற்றிப்பெற்றதாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை, உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் கட்டிடத்தொகுதி உள்ளிட்ட அரச சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தினர். அது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ்துறை பிரதானி கேர்னல் பெபியோவை பதவியிலிருந்து நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரேசில் ஜனாதிபதியாக லூலா டி சில்வா பதவியேற்று ஒரு வாரத்தின் பின்னரே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.