கம்பஹா குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைத்துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் குளியாப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்களெனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து குறித்த ஆயுதங்களை வழங்கிய மற்றுமொரு நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் குறித்த ஆயுதத்தை பயன்படுத்தி குற்றச்செல்களை முன்னெடுத்த திட்டமிட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.