எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த அறிக்கை..
Related Articles
இலங்கை கடல் எல்லைக்குள் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடம், சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுரவினால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வழங்கப்படவுள்ளது.
இலங்கை கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக கோரியுள்ளதாகவும், குறித்த இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கான நியாயமான காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் உள்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் காணப்படும் நிலையில், சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்கு தொடர எதிரப்பார்க்கப்படுவதாகவும், கப்பலின் காப்புறுதி நிறுவனத்துடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.