தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை விணைத்திறனுடன் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தோட்ட தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது. பெருந்தோட்ட தொழிற்துறைக்கான சட்ட விதிகளை மேலும் செயற்திறனுடனும், சிறந்த முறையிலும் முன்னெடுக்குமாறு அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அவர்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு விசேட கண்காணிப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடிதங்களை அனுப்பும் போது அதற்கு கட்டாயம் தமிழ் மொழியை பயன்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தோட்ட தொழிலாளர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், வடிவேல் சுரேஸ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்;டமை குறிப்பிடத்தக்கது.