பிரேசிலில் வன்முறையில் ஈடுபட்ட ஜொயார் பொல்சனாரோவின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கைது..
Related Articles
பிரேசிலில் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி ஜொயார் பொல்சனாரோவின் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பொல்சனாரோ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றதாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவர்கள் பிரேசில் ஜனாதிபதி மாளிகை, உச்ச நீதிமன்றம் மற்றும் காங்கிரஸ் கட்டிடத்தில் நேற்றைய தினம் கைப்பற்றினர். எனினும் குறித்த கட்டிடங்கள் நேற்று பிற்பகல் அளவில் அந்நாட்டு இராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களது இவ்வாறான நடவடிக்கை பயங்கரவாத செயற்பாடென ஜனாதிபதி லூலாடா சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஆயிரக்கணக்கான பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ஜெயார் பொல்ஷனாரோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.