நீண்டகாலமாக நிலவும் தொழிற்சங்க பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பிரித்தானிய பிரதமர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். தாதியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலைளில் அதுதொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாரென பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் இலவசமான சேவை வழங்கும் துறையாக காணப்படுகின்றது. அண்மைக்காலமாக ஒப்பீட்டளவில் குறைந்த வருமானம் பெறுவதாக சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். சுகாதார பணியாளர்களுக்கு வரி செலுத்துவோர் ஊடாக அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் தாதியர்கள், எம்பியூலன்ஸ் ஊழியர்கள், ஏனைய சுகாதார பணியாளர்களுக்கான தட்டுப்பாடு நிலவும் நிலையில் ஒரு சில வைத்தியசாலைகளில் எதிர்வரும் காலப்பகுதியில் பாரிய பிரச்சினைகள் ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளது. முறையான காரணங்களுடன் பேச்சுவார்;த்தை முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும், அதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தொழிற்சங்கங்களுக்கு பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.