குவைத்தில் வனாந்தரம் ஒன்றில் விவசாய பண்ணையில் பலவந்தமாக தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மீட்பு..
Related Articles
குவைத்தில் உள்ள வனாந்தரம் ஒன்றில் விவசாய பண்ணையில் பலவந்தமாக தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் சிலர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.
குவைத்-ஈரான் எல்லை பகுதியில் இருக்கும் வனாந்தரம் ஒன்றில் நடத்திச் செல்லப்பட்ட விவசாய பண்ணையில் பலவந்தமாக தங்க வைக்கப்பட்டிருந்த ஆறு இளைஞர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள். சட்ட விரோத முகவர் ஊடாக அவர்கள் குவைத்துக்கு வேலைவாய்ப்புக்கென சென்றுள்ளனர்.
விவசாய பண்ணையில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் அங்கு சித்திரவதைக்குள்ளனானதை குவைத் தூதரகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். கடும் பிரயத்தனங்களின் பின்னர் குறித்த இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.