குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு குழுக்களை சார்ந்த 10 பேர் ஆயுதங்களுடன் கைது..
Related Articles
பொரளை மற்றும் நாரஹேன்பிட்ட பிரதேசங்களில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு குழுக்களை சார்ந்த 10 பேர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.
2 வாள்கள், 4 கத்திகள், 6 இரும்பு கம்பிகள், இரண்டு கூரிய ஆயுதங்கள் என்பன சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக இரண்டு குழுக்களுக்கும் இடையில் மோதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் கொலை சம்பவத்தோடு தொடர்புப்பட்ட சந்தேக நபர் ஒருவரும் உள்ளடங்குகின்றார். கைதுசெய்யப்பட்ட 10 பேரில் 8 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இரண்டு சந்தேக நபர்களிடம் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.