பஸ் கட்டண மறுசீரமைப்பு குறித்து இன்றைய தினம் பேச்சுவார்த்தை..
Related Articles
பஸ் உரிமையாளர்கள் சங்கங்களுக்கு பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இன்றைய தினம் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில் பஸ் கட்டண மறுசீரமைப்பு குறித்து அதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அதன்போது ஆணைகுழு குறிப்பிட்டுள்ளது. டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும் குறைக்கப்பட்டுள்ள டீசல் விலை கட்டண குறைப்பை மேற்கொள்வதற்கு போதுமானதல்ல என பஸ் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையிலேயே இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.