இலங்கை – இந்திய ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நாளை…
Related Articles
இந்திய மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. டி டுவண்டி தொடரை இலங்கை அணி 2 – 1 என்ற அடிப்டையில் இழந்துள்ள நிலையில் ஒரு நாள் தொடர் குறித்த எதிர்பார்ப்பில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. முதல் போட்டி கவ்ஹாத்தியில் பகலிரவுப்போட்டியாக இடம்பெறவுள்ளது. 3 போட்டிகளும் பகலிரவு போட்டிகளாகவே இடம்பெறவுள்ளன.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இதுவரை 162 ஒரு நாள் போட்டிகள் இடம்பெற்ற நிலையில் அவற்றில் 93 போட்டிகளில் இந்திய அணியும், 57 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றிப்பெற்றுள்ளன. இறுதியாக இரு அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்கொண்ட ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கொண்டிருந்தது. எனினும் தொடர் இந்திய அணிவசமாகியிருந்தது. 50 ஓவர் உலக கிண்ண தொடர் இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை அணிக்கு இந்திய ஆடுகளங்கள் மற்றும் அங்குள்ள நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் செயற்படுவதற்கு சிறந்த பயிற்சியாக ஒரு நாள் தொடர் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.