ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையில் 36 மணித்தியால போர் நிறுத்தம்..
Related Articles
யுக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். எனினும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை யுக்ரேன் ரஷ்யாவின் பிராந்தியமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும், யுக்ரேனுக்கும் இடையில் பேச்சுவார்த்தையை ஏற்படுத்த துருக்கி ஜனாதிபதி தையூப் அர்துகான் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அவர் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன்போதே நிபந்தனைகளுடன் யுக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரஷ்யாவுக்கும், யுக்ரேனுக்கும் இடையில் 36 மணித்தியால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் ஜனவரி மாதம் 6 மற்றும் 7ம் திகதிகளில் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணிமுதல் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.