பாடசாலைகளை அண்மித்த திடீர் சுற்றிவளைப்புக்களின்போது போதைப்பொருட்களுடன் 55 பேர் கைது..
Related Articles
மேல் மாகாணத்தில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களின்போது, போதைப்பொருட்களுடன் 55 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் ஒரு மணிமுதல், 3 மணிவரை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 9.9 கிரேம் ஐஸ் போதைப்பொருள், 14.4 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள், 2.8 கிரேம் கஞ்சா மற்றும் 20 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் திடீர் சுற்றிவளைப்புக்கள் நடத்தப்படுமென சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.