புன்னகை ஓர் மாயவிசை
Related Articles
சில வேளைகளில் அந்த நாளை சிறப்பாக்க ஒரு புன்னகை மட்டுமே தேவை, அது யாரோ ஒருவர் உங்களுக்குக் கொடுத்தாலும் அல்லது நீங்கள் இன்னொருவருடன் பகிர்ந்து கொண்டாலும். சிறிய இரக்கச் செயல்கள் ஒரு பயங்கரமான நாளைக் கொண்டிருந்த ஒருவருக்கு ஒரு பிரகாசமான புன்னகையைக் கொண்டு வரலாம், மேலும் அது தொடர்ந்து வரும் அனைத்தையும் மாற்றும். அந்தளவிற்கு புன்னகைக்குள் பல மகத்துவங்கள் நிறைந்திருக்கின்றன. இதற்காகவே ஒரு நாளும் உருவாக்கப்பட்டது. இதற்காக அடித்தளம் இட்டவர் அமெரிக்க வணிக கலைஞரான Harvey Ball.
1963 இல் Harvey Ball (State Mutual Life Assurance Company) என்ற நிறுவனத்தின் பிரசாரத்திற்காக Smile Face வடிவத்தை உருவாக்கினார். காரணம் அதன் ஊழியர்களின் மன உறுதியை உயர்த்தி நேர்மறையான எண்ண வெளிப்பாடுகளை ஊக்குவிக்கவே உருவாக்கினார். இருப்பினும் காலம் செல்லச் செல்ல Smile Face வணிகமயமாக்கலால், அதன் உண்மை அர்த்தத்தை வெளிப்படுத்தபயன்படுத்தப்படவில்லை.


புன்னகையே குழந்தைகளின் உன்னத மொழி
அதைக்குறித்து வருத்தப்பட்ட Harvey Ball, உண்மை அர்த்தத்தை உலகளவில் பரப்ப 1999ல் ஒருநாளை அறிவித்தார் அதுதான், அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளி, உலக புன்னகை தினம். இந்நாளின் நோக்கம் ஒரு வருடத்தில் ஒரு நாளை புன்னகைக்கும், அன்பான செயல்களுக்கும் அர்ப்பனிப்பதாகும். உலக புன்னகை தினத்தின் கருப்பொருள் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியாக இருக்கும் — கருணைச் செயலைச் செய்யுங்கள். ஒருவருக்கு சிரிக்க உதவுங்கள். என்பதாகவும். இச்சிறந்த விடயத்தை உலகுக்கு சேர்த்த Harvey Ball 2001 இல் இறந்த பிறகு, அவரது பெயரையும் நினைவையும் போற்றும் வகையில் Harvey Ball World Smile Foundation என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. எனவே ஒவ்வொரு வருடமும் புன்னகை தினத்தில் இந்நிறுவனமானது பல செயற்திட்டங்கள் மூலமாக மக்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குகிறது.
இந்த உலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அல்லது கண்டுபிடிக்கப்பட்ட பல விடயங்கள் மனித உலகுக்கு நன்மை பயக்கவே உருவானது. ஆனால் அதன் குறிக்கோளே மறக்குமளவிற்கு அதை வீண்செயல்களுக்கே பயன்படுத்துகின்றோம்
அப்படியான பலவிடயங்களில் ஒன்றுதான் நாம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்துகின்ற smiley face emoji ஒருவரின் நற்செயலை பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்துவதை விடுத்து நம்மில் பெரும்பாலானோர் ஒருவரின் பதிவை கேலிக்குள்ளாக்கவும் பதிவிட்டவரை சங்கடப்படுத்தவும் பயன்படுத்துகின்றோம். smiley face emoji ஒரு நல்ல செயலுக்கான மனதின் மகிழ்ச்சிகர வெளிப்பாடு. அதை சரியான விதத்தில் பயன்படுத்துவோம்.
இனம் மதம் மொழி கடந்து புன்னகையை உதிர்த்திடுவோம்.