இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது T – 20 போட்டி இன்று
Related Articles
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டுவண்டி – 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளும் பூனே சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளன. இரவு 07.00 மணிக்க போட்டி ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகளை கொண்ட டுவண்டி – 20 தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்கும்.
இதேவேளை இன்றைய போட்டியில் இந்திய அணியின் விக்கட் காப்பாளர் சஞ்சீவ் செம்சன் விளையாட மாட்டாரென தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவது போட்டியில் விளையாடிய அவர் காயமடைந்துள்ளதால் இன்றைய போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜித்தேஸ் சர்மா அணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.