முதற்தொகுதி முட்டை அடுத்த வாரம் முதல் இறக்குமதி..
Related Articles
முட்டை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த வாரம் முதற்தொகுதி முட்டை இறக்குமதி செய்யப்படுமென வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். உள்நாட்டில் முட்டை விலை பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் நலனை கருத்திற்கொண்டு முட்டை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதற்கு கடந்த 2ம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியதாக, அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கம் முட்டை இறக்குமதி செய்தால் உள்நாட்டில் முட்டை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்படுவார்களென சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.