குறைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை கட்டணம்
Related Articles
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கான பஸ் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பஸ் சேவை இன்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு கதிர்காமம் அரை சொகுசு பஸ் சேவையை இரத்துச் செய்வதன் மூலம் ஆயிரத்து ஐந்நூற்று நாற்பத்தொன்று ரூபாவாக இருந்த கட்டணம் ஆயிரத்து நூற்று பதினேழு ரூபாவாக குறைக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.