மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனை ஒருவார காலத்திற்கு ஒத்திவைப்பு
Related Articles
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதனை ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண அதிகரிப்பு குறித்த யோசனைக்கு பல்வேறு தரப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் அமைச்சரவையில் அது தொடர்பான யோசனை துறைசார் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் சிறிய நீர்மின் உற்பத்தி நிலையங்களை மூட வேண்டிய அச்சுறுத்தல் காணப்படுவதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 75 சதவீத மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், 5 மாதங்களுக்குள் மீண்டும் மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மின் கட்டண அலகுகளுக்கான கட்டணத்தையும் நிலையான கட்டணத்தையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த யோசனை தொடர்பான கண்காணிப்புக்காக ஒருவார கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.