மகநெகும திட்டத்தின் தலைவர், நிறைவேற்று பணிப்பாளர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது..
Related Articles
மகநெகும திட்டத்தின் தலைவர், நிறைவேற்று பணிப்பாளர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் மகநெகும திணைக்களத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த புதுவருட கடமைகளை பொறுப்பேற்றும் நிகழ்வின்போது அமைதியின்மை ஏற்பட்டது. அதன்போது அங்குள்ள உயர் அதிகாரிகளை ஊழியர்கள் தடுத்து வைத்திருந்த நிலையில், பொலிஸாரின் தலையீட்டினால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சம்பவத்தின்போது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இருவர் பேலியகொட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மகநெகும திட்டத்தின் சாரதிகள் சங்க தலைவர் மற்றும் உறுப்பினரொருவரே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.