பாடசாலைகளில் 2ம் தரம் முதல் 11ம் தரம் வரையிலான மாணவர்களை உள்வாங்குவதற்கு புதிய முறைமை
Related Articles
பாடசாலைகளில் தரம் இரண்டு முதல் 11 வரை மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சுற்றுநிரூபங்களின் காணப்படும் விதிமுறைகளை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய திருத்தங்களுக்கமைய பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான புதிய முறைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதென அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இடைநடுவே பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேவை காணப்படும் குழுக்கள் இனங்காணப்பட்டு, சகல மாணவர்களுக்கும் முறையான மற்றும் நியாயமான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் வகையில் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 6ம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் எவ்வித மாற்றங்களும் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களில் அதிகபட்சம் 40 மாணவர்களும், 6 முதல் 11 வரையான வகுப்புக்களில் அதிகபட்சம் 45 மாணவர்களும் காணப்படும் வகையில் வகுப்புக்களை நடத்திச்செல்லும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.