தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேர் கடும் நிபந்தனைகளுடன் அடிப்படையில் விடுதலை..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2023 12:39

தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேர் கடும் நிபந்தனைகளுடன் அடிப்படையில் விடுதலை..

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இந்திய மீனவர்கள் 12 பேர் கைதுசெய்யப்பட்டு நேற்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அதன்போது இந்திய மீனவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மன்னிப்பு கோரியதை அடுத்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட 3 வருட சிறைத்தண்டமை 10 வருடங்களுக்கு பருத்தித்துறை நீதவானினால் ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் குறித்த இந்திய மீனவர்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் வட கடற்பகுதிக்கு நுழைய கூடாதெனவும் கடும் நிபந்தனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினூடாக, கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2023 12:39