ஜனாதிபதி தலைமையில் புத்தாண்டில் அரச கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
Related Articles
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புத்தாண்டில் அரச கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக அதிகாரிகள் இன்று முற்பகல் புத்தாண்டில் தமது கடமைகளை ஆரம்பித்ததோடு, அதன்போது உறுதி மொழிகளையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் ஊழியர்கள் புத்தாண்டில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தனர். நிறுவன வளாகத்தில் நிறுவன தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஊழியர்கள் பங்கேற்றனர்.
புத்தாண்டில் நிறுவனத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்வதற்கு ஊழியர்கள் அரப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும், சவால்களை ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக முறியடிக்க முடியுமெனவும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலயமைப்பின் தலைவர் அதன்போது குறிப்பிட்டார். சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலயமைப்பு வளாகத்தில் மரக்கன்று ஒன்று நடப்பட்டது. நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சியின் செய்தி மற்றும் நடப்பு விவகார பிரிவின் பிரதி பொது முகாமையாளர் சுதர்மன் ரதலியகொட உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில் அமைச்சுக்களுக்காக நியமிக்கப்பட்ட செயலாளர்களும் தமது கடமைகளை இன்றைய தினம் ஆரம்பித்தனர். பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக எம்.சி.அமித் ஜயசுந்த கடமைகளை பொறுப்பேற்றார்.