வெல்லவாய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..
Related Articles
ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் வெல்லவாய பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உடவலவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய அம்பலாந்தொட்ட முகாம் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தனமல்வில வெல்லவாய வீதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கித்துல்கோட்டை பிரதேசத்தில் 886 கிராம் 20 மில்லி கிராம் போதைப்பொருளுடன் 20 வயதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தனமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.