மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளில் புதிய நடைமுறை..
Related Articles
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சேவைகள் குறித்தும் அவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் தெளிவுப்படுத்து ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. அமைச்சர் பந்துல குணவர்தன மோட்டார் போக்குவரத்து திணைக்கள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்டனர்.
வாகன இலக்க தகடுகளில் மாகாணத்தை குறிக்கும் ஆங்கில எழுத்துக்கள் நீக்கப்படுகின்றமை, வாகன உரிமை மாற்றம் தொடர்பான எம்.டி.6 படிவத்தின் பக்கங்களின் எண்ணிக்கை 24இல் இருந்து 12ஆக குறைக்கப்பட்டள்ளமை, வாகன சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் நடைமுறை, முழுமையாக காது கேளாதவர்களுக்கும் சாரதி அனுமதி பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட நடைமுறைகள் புதுவருடத்தில் அமுல்ப்படுத்துவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்நிலையில் சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் நடைமுறை முதல் காலாண்டில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புத்தாண்டில் மோட்டார் வாகன பதிவு அலுவலகத்தை டிஜிட்டல் மயப்படுத்தி செயற்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.