2022ம் ஆண்டை விட 2023ம் ஆண்டின் பொருளாதாரம் கடினமாக காணப்படும் : IMF
Related Articles
2022ம் ஆண்டை விட 2023ம் ஆண்டின் பொருளாதாரம் கடினமாக காணப்படுமென சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். உலகின் 3இல் ஒரு பங்கு பொருளாதாரம் 2023ம் ஆண்டில் மந்த நிலையில் காணப்படுமென அவர் எதிர்வு கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்து வரும் நிலையில் உலக பொருளாதாரம் கடினமாக காணப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுக்ரேன் போர், அதிகரித்து வரும் வட்டி வீதம் உள்ளிட்ட காரணிகள் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் அத்தோடு கொவிட்-19 வைரஸின் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.