புது வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று..
Related Articles
புது வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் மின்சார கட்டண மறுசீரமைப்பு குறித்த யோசனை அமைச்சவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நூற்றுக்கு 75 வீத மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மின் கட்டண மறுசீரமைப்பு குறித்து அமைச்சரவையினால் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் கருத்திற்கொள்ள போவதில்லையென பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.