விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை..
Related Articles
விவசாய துறையில் அரச அதிகாரி ஒருவர் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வத்தளை ஹூனுப்பிட்டியவிலுள்ள கொமர்சல் உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிவாரண உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள யூரியா மற்றும் பண்டி உரத்தை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. 365 கமநல சேவை மத்திய நிலையங்களின் ஊடாக உர விநியோகம் இடம்பெறுகிறது. உர விநியோகத்தின் போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அதிகாரிகள் செயற்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அதிகாரிகளுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.