நாட்டில் 29 ஆயிரத்து 930 பாரிய குற்றச்செயல்கள் நடப்பாண்டில் பதிவு
Related Articles
நாட்டில் இவ்வருடத்தில் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்கள் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் 29 ஆயிரத்து 930 பாரிய குற்றச்செயல்கள் நாட்டில் நடப்பாண்டில் பதிவாகியுள்ளதென பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவு பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். 497 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 223 துப்பாக்கி பிரயோகங்களுடைய கொலைச்சம்பவங்கள் எனவும், ஏனையவை தாக்குதலோடு தொடர்புப்பட்டவையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேல் மாகாணத்திலேயே 37 சதவீதமான பாரிய குற்றங்கள் பதிவாகியுள்ளன. களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயெ அதிகூடிய குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாகவும் 2 ஆயிரத்த 287 குற்றச்செயல்கள் அங்கு பதிவாகியுள்ளதென பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார். நாட்;டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியும் குற்றச்செயல்கள் அதிகரிப்புக்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் ஆயிரத்து 466 வாகன திருட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.