த்ரிபோச உற்பத்தியை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சவுத்ஏசியா கெட்வே டெர்மினல்ஸ் தனியார் நிறுவனத்திற்கும், சுகாதார அமைச்சிற்கும் இடையிலேயே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி தார்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் போசனை குறைவான குறைந்த எடையுடைய குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக த்ரிபோசவை பெற்றுக்கொடுப்பதே சுகாதார அமைச்சின் நோக்கமாகும். அதற்கு தேவையான மூலப்பொருட்களை ஒரு வருடத்திற்கு பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தமே இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலவசமாக ஒரு வருடத்திற்கு மூலப்பொருட்களை பெற்றுக்கொடுப்பதாகவும், அதற்காக 185 மில்லியன் ரூபா செலவாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நிகழ்வு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் இடம்பெற்ற நிலையில், சவுத்ஏசியா கெட்வே டெர்மினல்ஸ்தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகரி ரொமேஸ் டேவிட், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ ச்சந்திர குப்த, த்ரிபோச நிறுவனத்தின் தலைவர் ப்ரதீப் குணவர்தன ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.