இன்றைய தினம் முதல் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை முன்னெடுக்கப்படுகின்றது. கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட 20 இடங்களில் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனையை முன்னெடுக்க முட்டை வர்த்தகர்கள் சங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவு முட்டையின் விலை அதிகரித்ததையடுத்து நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொண்டிருந்தனர். அது தொடர்பில் விவசாயத்துறை அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது முட்டை வர்த்தகர்கள் 55 ரூபாவிற்கு முட்டையை விற்பனை செய்ய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இணக்கம் தெரிவித்தர்.
அதன் அடிப்படையில் கொழும்பு நகரம், கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லொறிகளை பயன்படுத்தி 20 இடங்களில் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை செய்யப்hடுகிறது. புறக்கோட்டை ரயில் நிலையம், தெமட்டகொட, கொம்பனிதெரு, தெஹிவளை, பத்தரமுல்லை, நுகோகொடை மரஹகம, மீகொட நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையம், ரூபவாஹினி கூட்டுதாபனத்தை அண்மித்த சந்தி, ஹோமக ஆகிய பிரதேங்களில் முட்டை விற்பனை இடம்பெறுகிறது. கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, ஜா-எல, ராகம,நீர்கொழும்பு, கிரிபத்கொட, கடவத்தை பேலியகொட ஆகிய இடங்களில் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.