துப்பாக்கிகள், தோட்டக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது..
Related Articles
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொம்பே முக்கலான சந்தியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக தொம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 9 மில்லி மீட்டர் ரக 39 தோட்டாக்கள், 31 ரீ 56 ரக தோட்டக்கள், மெஷீன் ஒன்று மற்றும் 8 கிராம் ஐஸ் போதைப்பொருள் 4 இலட்சம் ரூபா பணம் என்பன சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர் தெல்கொட பிரதேசத்தை சேரந்தவரென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இன்றைய தினம் பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை சிரிபுர இயலயக்குரே மற்றும் நுவரகல ஆகிய பகுதிகளிலேயே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.