வியட்நாம் கடற்பகுதியில் நிர்கதியாகியிருந்த இலங்கையர்கள் 152 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் குறித்த தரப்பினர் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 8ம் திகதி வியட்நாம் கடற்பகுதியில் நிர்கதியாகியிருந்த நிலையில் 302 பேர் படகிலிருந்து மீட்கப்பட்டனர். அவர்களில் 152 இலங்கையர்கள் காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டது. படகு மூலம் சட்டவிரோதமான முறையில் குறித்த 152 பேரும் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.இந்நிலையில் வியட்நாமிலிருந்து அவர்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வியட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் இலங்கைக்கு..
படிக்க 0 நிமிடங்கள்