23 வருடங்களின் பின்னர் புகையிரதங்களின் ஊடாக மரக்கறிகளை ஏற்றிச்செல்லும் செயற்பாடு மீள ஆரம்பம்..
Related Articles
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு யோசனைகயின் அடிப்படையில் 23 வருடங்களின் பின்னர் புகையிரதங்களின் ஊடாக மரக்கறிகளை ஏற்றிச்செல்லும் செயற்பாடு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புகையிரதங்களில் மரக்கறிகளை ஏற்றிச்செல்வதற்காக புதிதாக ஐந்து பெட்டிகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
நாணு ஓயா ரயில் நிலைத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு மரக்கறிகளை கொண்டுவரும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த மரக்கறிகள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட அங்கிருந்து பேலியகொடையிலுள்ள மெனிங் சந்தைக்கும், சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.