எதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை குறையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மெரல் மென்டிஸ் கூறினார்.
மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களிலும் தாழ்வார பிரதேசங்களிலும் மழைவீழ்ச்சி குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரையோரப் பிரதேசங்களிலும் காலநிலை சீராக இருக்கும் என்றும் வளிமண்டவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.