490 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் அம்பலாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அம்பலாந்தோட்டை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு வரப்பட்ட 490 மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அம்பலாந்தோட்டை, பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஆவார்.
சந்தேகநபருக்கு இந்த போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.