பொது அமைதியை முன்னெடுத்துச்செல்வதற்கு குறிப்பிட்ட சில பிரேதங்களுக்கு ஆயுதமேந்திய படையினரை அழைத்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 12வது பிரிவிற்கமைய அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் குறித்த அழைப்பை விடுத்துள்ளார். இன்று முதல் குறித்த வர்த்தமானி அமுலாகிறது.
இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமான படைக்கு இது பொருந்துமென அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ், கிளிசொச்சி, மன்னார், முல்லைத்தீவு , மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் நிர்வாக மாவட்டங்கள் அதேபோல் அதனை அண்மித்த நீர் வழி பகுதிகளுக்கும் குறித்த வர்த்தமானி பொருந்துமென அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி, மாத்தளை, நுவரெலியா, வவுனியா, குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை. இரத்திரனபுரி மற்றும் கேகாலை நிர்வாக மாவட்டங்களில் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் திகதி, இலக்கம் 2211இன் கீழ் 55வது பிரிவிற்கமைய அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தலின் படி அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் நீடிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானிக்கமை விசாரணை ஆரணக்குழுவின் ஆயுட்காலம் ஜனவரி மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.