இலங்கையில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள 6 மோட்டார் சைக்கிள்கள் வெலிவேரிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஆயிரம் cc என்ஜின் கொள்ளளவை கொண்ட குறித்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கம்பஹா பொலிஸ் பிரிவின் குற்றவிசாரணை அதிகாரிகள் வெலிவேரிய ஹேனேகம பகுதியில் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். இதன்போது சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள 6 மோட்டார் சைக்கிள்கள் சுற்றிவளைப்பு
படிக்க 0 நிமிடங்கள்