இவ்வருடத்தின் முதல் 10 மாதங்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 67 ஆயிரத்து 900 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்தியருந்த குற்றச்சாட்டில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 377 கிலோ கிராமிற்கும் அதிக ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 35 ஆயிரத்து 775 பேர் ஹெரோயன் போதைப்பொருள் சார்ந்த குற்றத்திற்காகவும், 25 ஆயிரத்து 114 பேர் கஞ்சா போதைப்பொருள் சார்ந்த குற்றத்திற்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்து 46 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு. 10 ஆயிரத்து 214 கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்தின் முதல் 10 மாதங்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 67 ஆயிரத்து 900 பேர் கைது..
படிக்க 0 நிமிடங்கள்