முக்கிய குற்றவியல் குற்றவாளிகள் 9 பேர் இந்தியாவில் கைது
Related Articles
நாட்டின் முக்கிய குற்றவியல் குற்றவாளிகள் 9 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாலே குணா, லடியா, வல்லே சுரங்கா, புகுடிகண்ணா உள்ளிட்டோர் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இலங்கை மற்றும் இந்தியாவை தளமாகக் கொண்டு நீண்டகாலமாக சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தியாவின் திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் வைத்தே இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் இவர்கள் கைதாகியுள்ளனர்.
விசாரணையில், கிம்புலாலே குணா, லடியா, வல்லே சுரங்கா போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அவர்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிம்புலாலே குணா என்றழைக்கப்படும் குணசேகரன், புகுடிக்கண்ணா என்ற புஷ்பராஜா, மொஹமட் அஸ்மின், அழகப்பெருமவின் சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா சந்திரசேன, தனுக ரொஷான், வல்லே சுரங்க மற்றும் திலிபன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தமை, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியமை மற்றும் பரிமாற்றம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதான 9 பேர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது