தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க வலயம் : சீரற்ற காலநிலை எதிர்வரும் 22ம் திகதி வரை நீடிக்கும்
Related Articles
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க வலயம் தற்போது வட மேற்காக பயணித்து மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நாட்டை பாதித்துள்ள சீரற்ற காலநிலை எதிர்வரும் 22ம் திகதி வரை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியங்களில் ஒரு சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும். அத்தோடு கடற்பகுதிகளில் காற்றின் வேகம் 40 – 50 கிலோ மீட்டர் வரை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது.