மினுவாங்கொட புதிய வர்த்தக நிலைய தொகுதி அமைச்சர் பிரச்சன்ன ரணதுங்க தலைமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் 395 மில்லியன் ரூபா செலவில் மூன்று அடுக்குகளை கொண்டதாக வர்த்தக நிலைய தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்வின் போது, கடந்த காலங்களில் நாட்டில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தி;ருந்த இளைஞர்கள் குழு ஒன்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை சந்தித்திருந்தனர். போராட்டங்களினால் நாடு பின்நோக்கி பயணித்ததாகவும், நாட்டை கட்டியெழுப்புவதற்கே போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும், நாட்டை அழிப்பதற்கு அல்லவென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதன்போது சுட்டிக்காட்டினார். குறித்த போராட்டக்காரர்கள் குழு தமது தவறை உணர்ந்துள்ளதாக அமைச்சரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மினுவாங்கொட புதிய வர்த்தக நிலைய தொகுதி அமைச்சர் பிரச்சன்ன ரணதுங்க தலைமையில் திறப்பு..
படிக்க 0 நிமிடங்கள்