fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ணத்தை தனதாக்கிய ஆர்ஜன்டீனா

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2022 10:25

உலக கிண்ணத்தை தனதாக்கிய ஆர்ஜன்டீனா

FIFA உலக்கிண்ண உதைப்பாந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆஜன்டினா அணி வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.

நேற்று நடைபெற்ற இந்த  இறுதி போட்டியில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆஜன்டினா அணிகள்  மோதின . கட்டாரின் லுசைல் (Lusail) மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 8.30 இற்கு போட்டி ஆரம்பமானது.

போட்டி தொடங்கிய 23-ஆவது நிமிடத்தில் ஆஜன்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணித்தலைவர் மெஸ்சி தனது அணிக்கான முதல் கோலை அடித்து அந்நாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து 36-வது நிமிடத்தில் ஏஞ்சல் டிமெரியா ஆஜன்டினாவிற்கான 2-ஆவது கோலை அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஜன்டினா முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் முயற்சியை பிரான்ஸ் வீரர்கள் தீவிரப்படுத்தினர். அதன்படி 80-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் மீண்டும் அவர் தமது அணிக்கு மேலும் ஒரு கோல் அடித்து ஆஜன்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையை எட்டியது. இதையடுத்து முதல் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவதாக கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. 108வது நிமிடத்தில் மெஸ்சி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் ஆஜன்டினா முன்னிலை பெற்றது.

118-வது நிமிடத்தில் எம்பாப்பே தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். இதையடுத்து இரு அணிகளும் 3-3 சமனிலை பெற்றன. எம்பாப்பே ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார். மூன்றாவது கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் ஆஜன்டினா வெற்றி பெற்றது.

இதன்மூலம் மூன்றாவது முறையாக ஆஜன்டினா உலக வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.

போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 44 மில்லியன் அமெரிக்க டொலர்; பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  இரண்டாவதாக தெரிவான அணிக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது .

இதேவேளை சுற்றுத்தொடரின் மூன்றாவது இடத்தை குரேஷிய அணி பெற்றுள்ளது. போட்டியில் மொரோக்கோ மற்றும் குரேஷிய அணிகள் மோதின. இரண்டிற்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் குரேஷிய அணி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு 27 மில்லியன் ரூபா பரிசு

 

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2022 10:25

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க