வடகொரியா புதிய ஆயுதமொன்றை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
Related Articles
வடகொரியா புதிய ஆயுதமொன்றை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. அதிக உந்து சக்திகொண்ட செறிவு எரிபொருள் மோட்டாரொன்றை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. அணுவாயுதம் மற்றும் ஏவுகணை வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் புதிய ஆயுதம் பரிசீலிக்கப்பட்டதாக வடகொரிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திட எரிபொருள் ஏவுகணைகளை தயாரிப்பதற்கு புதிய ஆயுதம் முக்கிய பங்கு வகிக்குமென வடகொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அதிக உந்துசக்தி கொண்ட செறிவு எரிபொருள் மோட்டாரை பரிசீலிக்கும் செயற்பாட்டை வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பரிசோதனை வெற்றியடைந்ததையடுத்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.