புதிய அரசியல் கூட்டணி தயாரென மைத்ரி அறிவிப்பு..
Related Articles
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் தேர்தலில் அரசியல் கூட்டணியிலேயே போட்டியிடுமென கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. கூட்டணியை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவுசெய்யும் நடவடிக்கை மாத்திரமே எஞ்சியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்தார். தானும், ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து நாட்டை ஆட்சிசெய்தபோது சமூக ஊடகங்களில் தனக்கு சேறு பூசினர். தன்னை மோசமாக விமர்சித்தனர். தனது மக்கள் சேவைக்கு தடையேற்படுத்தியவர்கள் இன்று மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஜனாதிபதி பதவியும் இல்லை, பிரதமர் பதவியும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்தார்.