கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண் ஒன்றுடன் மோட்டார் வண்டி மோதி விபத்துக்குள்ளானதையடுத்து நாட்டிலிருந்து தப்பிச்சென்ற மோட்டார் வண்டியின் சாரதி இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து அவர் நாடு திரும்பிய நிலையிலேயே கைதாகியுள்ளார். கடந்த 10ம் திகதி அதிகாலை பம்பலப்பிட்டியவிலிருந்து காலி நோக்கி சந்தேக நபரினால் செலுத்தப்பட்ட மோட்டார் வண்டி முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்தார். மோட்டார் வண்டியை செலுத்திய வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த இளைஞர் விபத்து இடம்பெற்ற தினத்தன்று வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் நாடு திரும்பிய சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்;டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொள்ளுப்பிட்டி பகுதி விபத்தில் தலைமறைவான சாரதி விமான நிலையத்தில் கைது..
படிக்க 1 நிமிடங்கள்