கொழும்பு – குருநாகல் வீதியின் மெட்டிகும்புர பிரதேசத்தில் இரண்டு பஸ் வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நோக்கி பயணித்த இரண்டு இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகளில் ஒரு பஸ் வண்டி மற்றைய பஸ் வண்டியை முந்திச்செல்ல முற்படுகையில் விபத்து நேர்ந்துள்ளது. அநுராதபுரம் டிபோக்குரிய 2 பஸ் வண்டிகளே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவர் ஒரு பஸ் வண்டியின் நடத்துனரும், மற்றைய பஸ் வண்டியில் பயணித்த இரண்டு பயணிகளுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொல்காவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு – குருநாகல் வீதி விபத்தில் மூவர் காயம்
படிக்க 1 நிமிடங்கள்