கொழும்பின் வட பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சமூக ரீதியில் ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். வேலைத்திட்டத்தின் கீழ் வட கொழும்பில் மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையான ஆயிரத்து 200 பேருக்கு சேவையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். குறித்த தரப்பினர் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் அவர்களது வீடுகளிலேயே தங்கியிருந்தவர்களெனவும், பிரதேச செயலக காரியாலயத்திலுள்ள மனோதத்துவவியல் நிபுணர்களின் ஆலோசனைகளும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சமூக ரீதியில் ஆலோசனைகளை வழங்க வேலைத்திட்டம்
படிக்க 0 நிமிடங்கள்